
ஆண்டவராகிய இயேசுவே,
பெத்லகேமின் ஏழ்மையில்
உம்மை நாங்கள் தியானிக்கிறோம்;
உமது அன்பின் சாட்சிகளாக
எங்களை ஆக்குவீராக.
அந்த அன்பே
உமது தெய்வீக மகிமையைத் துறந்து,
மனிதரிடையே பிறக்கவும்,
எங்களுக்காக இறக்கவும்
உம்மைத் தூண்டியது.
உமது தூய ஆவியை எங்களுள் ஊற்றியருளும்;
மனுவுருவாதலின் அருள்
ஒவ்வொரு விசுவாசியிலும்
திருமுழுக்கில் பெற்றுக்கொண்ட
புதிய வாழ்வுக்கு
மேலும் தாராளமாகப் பதிலளிக்கும்
உறுதியைத் தூண்டட்டும்.
பகலைவிட ஒளிமிகுந்த
இந்த இரவின் ஒளி
எதிர்காலத்தின் மீது வீசி,
அமைதியின் பாதையில்
மனிதகுலத்தின் அடிகளை வழிநடத்தட்டும்.
அமைதியின் அரசே,
இன்று எங்களுக்காகப் பிறந்த மீட்பரே,
புதிய ஆயிரமாண்டில் உமக்குமுன் திறக்கும்
பாதையில் உமது திருச்சபையுடன்
நடந்து வாரும்!
(திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல்)

