
இயேசுவின் தாயான மரியே,
உமது இதயத்தை எனக்குத் தாரும்,
அது எவ்வளவு அழகானது,
எவ்வளவு தூய்மையானது,
எவ்வளவு மாசற்றது,
அன்பும் தாழ்மையும் எவ்வளவு நிறைந்தது:
வாழ்வின் அப்பத்தில் இயேசுவை
ஏற்றுக்கொள்ளும் ஆற்றலை எனக்குத் தாரும்,
நீர் அவரை அன்புசெய்ததுபோல் நானும் அவரை அன்புசெய்து,
ஏழைகளில் மிக ஏழையானவரின்
எளிய தோற்றத்தில் அவருக்குப் பணிபுரியவும் அருள்புரியும்.
ஆமென்
கல்கத்தா புனித தெரேசா.

